தேசிய செய்திகள்

ஜி-7 மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்கிறார் பிரதமர் மோடி + "||" + PM Modi to attend outreach sessions of G7 summit

ஜி-7 மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்கிறார் பிரதமர் மோடி

ஜி-7 மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்கிறார் பிரதமர் மோடி
இங்கிலாந்து பிரதமரின் அழைப்பை ஏற்று வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
புதுடெல்லி, 

இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் அடங்கிய, ஜி - 7 அமைப்பின் மாநாடு, ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் என்ற இடத்தில் வரும் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்திருந்தார். 

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள, 'ஜி - 7' மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியின் வாயிலாக பங்கேற்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

முன்னதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  

தொடர்புடைய செய்திகள்

1. வைத்தீஸ்வரன்கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா தர்மபுரம் ஆதீனம் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற தையல் நாயகி- வைத்தியநாதசாமி கோவில் அமைந்துள்ளது.
2. ஜி-7 மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று பங்கேற்பு
இன்று நடைபெறும் ஜி-7 மாநாட்டில் காணொலி காட்சியின் வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
3. கொரோனா பாதித்த இம்ரான் கான் ஊடக குழு கூட்டத்தில் பங்கேற்பு
கொரோனா பாதித்த இம்ரான் கான் ஊடக ஊடக குழுவினருடனான கூட்டத்தில் கலந்து கொண்டது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
4. மேற்கு வங்காள தேர்தல்: மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் அமர்ந்து பேரணியில் பங்கேற்பு
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல் மந்திரி மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி காந்தி மூர்த்தி பகுதியில் இருந்து ஹஜ்ரா வரை பேரணியில் கலந்து கொள்கிறார்.
5. அண்ணா பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழா; ஜனாதிபதி பங்கேற்பு
அண்ணா பல்கலை கழகத்தில் தங்க பதக்கங்கள் மற்றும் முதல் வகுப்பு பட்டம் பெறுபவர்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர்.