மாநில செய்திகள்

ஜூன் 10: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் + "||" + June 10: District wise full status of corona damage in Tamil Nadu

ஜூன் 10: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்

ஜூன் 10: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 23,08,838 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 20,91,646 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 32,049 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 358 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 28,528 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் இன்று மேலும் 2,236 பேருக்கும், ஈரோட்டில் 1,390 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இன்று மேலும் 1,223 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5,22,052 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 7,658 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2,94,25,279 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,81,920 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,86,90,398 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,71,237 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 1,88,664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 13,53,435 பேர் ஆண்கள் (இன்று-9,278 பேர்), 9,55,365 பேர் பெண்கள் (இன்று-7,535 பேர்). தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை விவரம்:-






























தொடர்புடைய செய்திகள்

1. 40 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை
தமிழ்நாட்டில் ஜூன் 21ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் என்னென்ன தளர்வுகள் வழங்குவது என்பது குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெறுகிறது.
2. மேலும் தளர்வுகள் வழங்கப்படுமா...? முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை தொடங்கியது
கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
3. ஜூன் 09: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
4. 34 மாவட்டங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு- பல்லாயிரக்கணக்கானோர் ஏமாற்றம்
மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வந்தால் மட்டுமே இந்த மாவட்டங்களில் இனி தடுப்பூசி போட முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
5. தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு 5 மணிநேரத்திற்கு பிறகு இ-பதிவு இணையதளம் செயல்படத் தொடங்கியது
தற்போது தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.