மாநில செய்திகள்

லஞ்சம் பெற முயற்சி: செல்போன் உரையாடலை கண்காணித்து சிபிஐ அதிரடி - 3 பேர் கைது + "||" + CBI arrests 3 for monitoring cell phone conversation

லஞ்சம் பெற முயற்சி: செல்போன் உரையாடலை கண்காணித்து சிபிஐ அதிரடி - 3 பேர் கைது

லஞ்சம் பெற முயற்சி: செல்போன் உரையாடலை கண்காணித்து சிபிஐ அதிரடி - 3 பேர் கைது
மதுரையில் லஞ்சம் பெற முயன்ற பொதுப்பணித்துறை மண்டல நிர்வாக பொறியாளர் உள்பட 3 பேரை சிபிஐ கைது செய்தது.
மதுரை,

மதுரை மண்டல மத்திய பொதுப்பணித்துறையின் கீழ் ஒப்பந்த பணிக்கான தொகை, ஜிஎஸ்டி கட்டணத்தை திரும்ப பெற லஞ்சம் பெற்றதாக கோட்ட நிர்வாக பொறியாளர் பாஸ்கர், ஒப்பந்ததாரர்கள் சிவசங்கர் ராஜா, நாராயணன் ஆகியோரை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.  

லஞ்சம் கொடுக்க முயன்ற ஒப்பந்ததாரர்கள் இருவரையும் சிபிஐ போலீசார் கைது செய்தனர்.

செல்போன் உரையாடலை கண்காணித்து சிபிஐ அதிரடியாக செயல்பட்டுள்ளது. கைதான மூவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.