தேசிய செய்திகள்

மராட்டியத்தில் புதிதாக 12,207 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 393 பேர் பலி + "||" + Maharashtra records 12,207 fresh COVID cases, 393 fatalities

மராட்டியத்தில் புதிதாக 12,207 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 393 பேர் பலி

மராட்டியத்தில் புதிதாக 12,207 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 393 பேர் பலி
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,207 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,207 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58,76,087 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 393 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,03,748 ஆக அதிகரித்துள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து இன்று மேலும் 11,449 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், மாநிலத்தில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 56,08,753 ஆக அதிகரித்துள்ளது. 

மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் தற்போது 1,60,693 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பையில் இன்று மேலும் 660 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இன்று மேலும் 9,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 9,830 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - 5 பேர் படுகாயம்
மராட்டிய மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
3. மராட்டியத்தில் இன்று மேலும் 10,442 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று மேலும் 10,442 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் 2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது
மராட்டியத்தில் இன்று புதிதாக 11,766- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் புதிதாக 10,989 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 261 பேர் பலி
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.