தேசிய செய்திகள்

இந்தியா-வங்காளதேச எல்லையில் சீன நாட்டை சேர்ந்தவர் கைது + "||" + Chinese national arrested on India-Bangladesh border

இந்தியா-வங்காளதேச எல்லையில் சீன நாட்டை சேர்ந்தவர் கைது

இந்தியா-வங்காளதேச எல்லையில் சீன நாட்டை சேர்ந்தவர் கைது
மேற்கு வங்காளத்தில் இந்தியா-வங்காளதேச எல்லையில் சீன நாட்டை சேர்ந்த ஒருவரை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
கொல்கத்தா, 

கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்தினரின் ஊடுருவல் முயற்சிகளை முறியடித்த போது ஏற்பட்ட மோதலால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திய மோதலுக்குப்பின் நிலைமை இன்னும் சீராகவில்லை. அங்குள்ள பங்கோங் சோ ஏரிக்கரையை தவிர, பிரச்சினைக்குரிய பிற பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப்பெற சீன ராணுவம் மறுத்து வருகிறது.

இவ்வாறு லடாக்கில் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் சீன நாட்டை சேர்ந்த ஒருவரை மேற்கு வங்காள எல்லைப்பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.). இன்று கைது செய்துள்ளனர். மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்ட எல்லைக்கு அருகே, இந்தியா-வங்காள தேசம் எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சீனாவை சேர்ந்த ஒருவர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றதை பி.எஸ்.எப். வீரர்கள் கண்டுபிடித்தனர். உடனே அவரை இடைமறித்து வீரர்கள் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு லேப்டாப், சீன பாஸ்போர்ட் மற்றும் சில பொருட்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.