தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம்: கொரோனாகால நிதி அறிவிப்பு + "||" + Rs 5,000 per 2,000 artists in Rajasthan: Corona financial announcement

ராஜஸ்தானில் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம்: கொரோனாகால நிதி அறிவிப்பு

ராஜஸ்தானில் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம்:  கொரோனாகால நிதி அறிவிப்பு
ராஜஸ்தானில் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு முதல் மந்திரி தலா ரூ.5 ஆயிரம் கொரோனா நிதியுதவி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.


ஜெய்ப்பூர்,

நாட்டில் கொரோனா 2வது அலையில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.  இந்நிலையில், கடந்த 7ந்தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதன்படி, காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படும்.  அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மாலை 4 மணிவரை ஒவ்வொரு நாளும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும்.

எனினும், வார இறுதி நாட்களான வெள்ளி கிழமை மாலை முதல் திங்கட்கிழமை காலை வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்நிலையில், முதல் மந்திரி அசோக் கெலாட் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் கொரோனா நிதியுதவி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.  அரசின் இந்த முடிவால், நிதி நெருக்கடியில் உள்ள மற்றும் தேவையாக உள்ள கலைஞர்கள் நிவாரணம் பெறுவார்கள் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 123 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 123 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கள்ளக்குறிச்சியில் 10 தெருக்கள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
கள்ளக்குறிச்சியில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 10 தெருக்கள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
3. இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்து நிலைகளிலான போட்டிகளில் இருந்தும் ஓய்வு
இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்து நிலைகளிலான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறும் அறிவிப்பினை இன்று வெளியிட்டு உள்ளார்.
4. இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் வெளியிட்டு உள்ளார்.
5. உத்தரகாண்ட் வெள்ளம்; பலியானோர் குடும்பத்திற்கு ரூ.4 கோடி இழப்பீடு, 125 பேர் மாயம்: முதல் மந்திரி அறிவிப்பு
உத்தரகாண்ட் வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.4 கோடி இழப்பீடு வழங்கப்படும் என முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.