உலக செய்திகள்

மக்கள் வாழ சிறப்பான நகரங்கள் பட்டியலில் அபுதாபி, துபாய், மஸ்கட் இடம் பிடித்தது - புள்ளி விவரத்தில் தகவல் + "||" + Abu Dhabi, Dubai and Muscat top the list of best cities to live in - statistics

மக்கள் வாழ சிறப்பான நகரங்கள் பட்டியலில் அபுதாபி, துபாய், மஸ்கட் இடம் பிடித்தது - புள்ளி விவரத்தில் தகவல்

மக்கள் வாழ சிறப்பான நகரங்கள் பட்டியலில் அபுதாபி, துபாய், மஸ்கட் இடம் பிடித்தது - புள்ளி விவரத்தில் தகவல்
மக்கள் வாழ சிறப்பான நகரங்கள் பட்டியலில் அபுதாபி, துபாய், மஸ்கட் இடம் பிடித்ததுள்ளதாக பொருளாதார புள்ளி விவரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய்,

கொரோனா பாதிப்பின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டன. எனினும் இந்த பாதிப்பை கட்டுப்படுத்தி பொதுமக்கள் தங்களது வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்ட சிறப்பான நகரங்கள் என்ற பெருமையை அபுதாபி, துபாய், மஸ்கட் உள்ளிட்ட நகரங்கள் பெற்றுள்ளன.

இதன்படி கடந்த 2019-ம் ஆண்டு 73-வது இடத்தில் இருந்த அபுதாபி 10 இடங்கள் முன்னேறி 63-வது இடத்தை அடைந்துள்ளது. அதேபோல் துபாய் நகரம் 74-வது இடத்தில் இருந்து 70-வது இடத்தையும், மஸ்கட் நகரம் 94-வது இடத்தையும் பெற்றுள்ளது.

வளைகுடா பகுதியில் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா, குவைத், ஜோர்டான் நாட்டின் அம்மான், எகிப்து நாட்டின் கெய்ரோ உள்ளிட்ட நகரங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மேற்கண்ட தகவல், கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி முதல் மார்ச் மாதம் 21-ந் தேதி வரை உலக அளவில் சேகரிக்கப்பட்ட பொருளாதார புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.