தேசிய செய்திகள்

பெங்களூருவில் இன்று முதல் 2 நாட்களுக்கு இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + Thundershowers in Bangalore for first 2 days today - Meteorological Department

பெங்களூருவில் இன்று முதல் 2 நாட்களுக்கு இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

பெங்களூருவில் இன்று முதல் 2 நாட்களுக்கு இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
பெங்களூருவில் இன்று முதல் 2 நாட்களுக்கு இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பெங்களூரு,

பெங்களூருவில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் கடந்த நேற்று முன்தினம் கடலோர மாவட்டங்கள், வட கர்நாடகத்தின் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. தென் கர்நாடகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது. 

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (வெள்ளிக்கிழமை) உருவாக இருப்பதால், அதன் எதிரொலியாக கர்நாடகத்தில் வருகிற 14-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். உத்தரகன்னடா, உடுப்பி, தட்சிண கன்னட ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட, தென் கர்நாடகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். 

வட கர்நாடகத்தில் வருகிற 13, 14-ந் தேதி கனமழை பெய்யும். அதனால் அந்த பகுதிக்கு மஞ்சள் வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இன்று முதல் 2 நாட்கள் இடியுடன் கூடிய மழை பெய்யும். அதே நேரத்தில் பகலில் நல்ல வெயிலும் அடிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,029 வாகனங்கள் பறிமுதல்
பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,029 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
2. பெங்களூருவில் தனியார் பள்ளி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்
பெங்களூருவில் தனியார் பள்ளி 120 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
3. பெங்களூருவில் இருந்து பீகாருக்கு 17-ந் தேதி சிறப்பு ரெயில் - தென்மேற்கு ரெயில்வே தகவல்
பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் இருந்து பீகார் மாநிலம் தனபூருக்கு வரும் 17-ந் தேதி ஒருமார்க்கமாக சிறப்பு ரெயில் இயங்குகிறது.
4. பெங்களூருவில் மேலும் 33 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
பெங்களூருவில் இதுவரை கொரோனா பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 1,221 ஆக உயர்ந்துள்ளது.
5. பெங்களூருவில் ஆக்சிஜன் பஸ் சேவை இன்று தொடக்கம்
பெங்களூருவில் ஆக்சிஜன் பஸ் சேவை இன்று முதல் தொடங்கப்படுவதாக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கூறினார்.