உலக செய்திகள்

அமெரிக்காவில் 7 வாகனங்கள் மீது பால் வண்டி மோதல்: 4 பேர் பலி; பலர் காயம் + "||" + Milk cart collision with 7 vehicles in US: 4 killed; Many others were injured

அமெரிக்காவில் 7 வாகனங்கள் மீது பால் வண்டி மோதல்: 4 பேர் பலி; பலர் காயம்

அமெரிக்காவில் 7 வாகனங்கள் மீது பால் வண்டி மோதல்:  4 பேர் பலி; பலர் காயம்
அமெரிக்காவில் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.


அரிசோனா,

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் நகரில் சாலையில் பால் ஏற்றி கொண்டு சென்ற லாரி ஒன்று போக்குவரத்து நெரிசலில் நிற்காமல், கட்டுப்பாட்டை இழந்து மற்ற பயணிகள் வாகனங்களுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இதுபோன்று அந்த வாகனம் 8 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியுள்ளது.  இந்த சம்பவத்தில், அந்த லாரி தீப்பிடித்து முற்றிலும் எரிந்து போனது.  இதில் பலர் படுகாயமடைந்தனர்.  உடனடியாக மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

எனினும், படுகாயமடைந்தவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.  பலர் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  அவர்களில் பலரது நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்

1. இருதரப்பினர் மோதல்; 11 பேர் மீது வழக்கு
விக்கிரமங்கலம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2. அமெரிக்காவில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதல்: 9 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி
அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி கொண்டதில் 9 குழந்தைகள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
3. மோதலில் ஈடுபட்ட மந்திரியை ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும்: கோவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
தமிழக நிதி அமைச்சருடன் மோதலில் ஈடுபட்ட மந்திரியை, ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோவா எம்.எல்.ஏ.வான சுதின் தாவலிக்கர் வலியுறுத்தி உள்ளார்.
4. சீனாவில் காரை கொண்டு மனைவி மீது மோதல்; 7 பேருக்கு கத்திக்குத்து: கணவன் வெறிச்செயல்
சீனாவில் பழிவாங்கும் நோக்கில் காரை கொண்டு மனைவி மீது மோதிய கணவரை தடுக்க சென்ற 7 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
5. திருத்தணி அருகே விபத்து: மின்கம்பம் மீது சரக்கு ஆட்டோ மோதல்; கணவன், மனைவி படுகாயம்
திருத்தணி அருகே காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி படுகாயம் அடைந்தனர். இதனால் மூன்று மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.