தேசிய செய்திகள்

ஆன்லைனில் வீடியோ பதிவிட்ட விவகாரம்: சேர்ந்து வாழ்ந்த பெண்ணை தீ வைத்து கொளுத்திய நபர் + "||" + Online video recording affair: The man who set fire to the woman he lived with

ஆன்லைனில் வீடியோ பதிவிட்ட விவகாரம்: சேர்ந்து வாழ்ந்த பெண்ணை தீ வைத்து கொளுத்திய நபர்

ஆன்லைனில் வீடியோ பதிவிட்ட விவகாரம்:  சேர்ந்து வாழ்ந்த பெண்ணை தீ வைத்து கொளுத்திய நபர்
கேரளாவில் ஆன்லைனில் வீடியோ பதிவிட்ட விவகாரத்தில் சேர்ந்து வாழ்ந்த ஆண் தீ வைத்து கொளுத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


திருவனந்தபுரம்,

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் என்ற பகுதியில் ஷாநவாஸ் என்பவரும், ஆதிரா (வயது 28) என்பவரும் திருமணம் செய்து கொள்ளாமல் நீண்டகாலம் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.  அவர்களுக்கு 3 மாத குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை ஆதிரா வெளியிட்டு உள்ளார்.  இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து உள்ளது.  இதில் ஆத்திரமடைந்த ஷாநவாஸ் மண்ணெண்ணெயை எடுத்து ஆதிரா மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் இருவரும் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.  அதன்பின்னர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  40 சதவீத காயங்களுடன் ஷாநவாஸ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து, ஆதிராவின் தாயார் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கல்வான் மோதல்: சீன வீரர்கள் அதிக அளவில் பலி என பதிவிட்ட சீனருக்கு 8 மாத சிறை தண்டனை
கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீன வீரர்கள் அதிக அளவில் பலி என பதிவிட்ட பிரபல சீன பிளாக்கர் 8 மாத சிறை தண்டனை பெற்றுள்ளார்.