தேசிய செய்திகள்

ஆந்திராவில் சரியான சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை 10 கி.மீ. சுமந்து சென்ற அவலம் + "||" + In Andhra Pradesh, due to lack of proper road facilities, a pregnant woman has to travel 10 km

ஆந்திராவில் சரியான சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை 10 கி.மீ. சுமந்து சென்ற அவலம்

ஆந்திராவில் சரியான சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை 10 கி.மீ. சுமந்து சென்ற அவலம்
ஆந்திர பிரதேசத்தில் சரியான சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை கிராமத்தினர் 10 கி.மீ. தூரம் சுமந்து சென்றுள்ளனர்.


விசாகப்பட்டினம்,

ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் ஹகும்பேட்டா மண்டல் என்ற பகுதியில் தீகலவலசா பஞ்சாயத்துக்கு உட்பட்ட கின்னரலோவா கிராமத்தில் வசித்து வருபவர் சிலக்கம்மா.  26 வயது கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி வந்துள்ளது.

ஆனால், அந்த கிராமத்திற்கு என்று சரியான சாலை வசதி இல்லை.  இதனால், ஆம்புலன்ஸ் வாகனம் கிராமத்திற்குள் வரமுடியவில்லை.  இதனை தொடர்ந்து கிராமவாசிகளே கர்ப்பிணியை 10 கி.மீ. தொலைவுக்கு சுமந்து கொண்டு நடந்தே சென்றுள்ளனர்.

அதன்பின் ஆம்புலன்ஸ் நிற்கும் பகுதிக்கு சென்ற அவர்கள் சிலக்கம்மாவை அதில் ஏற்றியுள்ளனர்.  இதுபற்றி உள்ளூர்வாசி ஒருவர் கூறும்பொழுது, சரியான சாலை வசதி இல்லை.  அதனால், எந்தவொரு வாகனமும் எங்களுடைய கிராமத்திற்குள் நுழைய முடியவில்லை.  அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.