தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்புகள்: ஜார்க்கண்டில் 10, 12ம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகள் ரத்து + "||" + Corona vulnerabilities: Class 10, 12 state board exams canceled in Jharkhand

கொரோனா பாதிப்புகள்: ஜார்க்கண்டில் 10, 12ம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகள் ரத்து

கொரோனா பாதிப்புகள்:  ஜார்க்கண்டில் 10, 12ம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகள் ரத்து
கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஜார்க்கண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.


ராஞ்சி,

ஜார்க்கண்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.  இதனால், சில தளர்வுகளுடன் வருகிற 16ந்தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.

இதேபோன்று, மாலை 4 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.  இந்நிலையில், கொரோனா தொற்று உயர்வை முன்னிட்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதுபற்றி அரசு சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்பில், இந்த பருவத்தில் நடைபெற வேண்டிய 10 மற்றும் 12ம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன.  இந்த முடிவை முதல் மந்திரி ஹேமந்த் சோரன் எடுத்துள்ளார்.

கடந்த 1ந்தேதி, நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழலால், மத்திய அரசு 12ம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்திருந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கடிதம்
தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
2. 2-வது ஆண்டாக திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் தேரோட்டம் ரத்து பக்தர்கள் வேதனை
2-வது ஆண்டாக திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
3. சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து
சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டது
4. கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா ரத்து
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக இந்துசமய அறநிலையத்துறையினர் அறிவித்துள்ளனர்.
5. 84 நாடுகளுக்கு 6.45 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி; மத்திய சுகாதார மந்திரி
84 நாடுகளுக்கு 6.45 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார மந்திரி தெரிவித்து உள்ளார்.