மாநில செய்திகள்

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு + "||" + Petrol and diesel prices go up in Chennai today

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்துள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. இதன் பின்னர், கடந்த மார்ச் மாதத்தில் விலை சற்று குறைந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்தது.

நேற்றைய தினம் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 96.94 ரூபாய்க்கு, டீசல் விலை லிட்டருக்கு 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து லிட்டர் 97.19 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து 91.42 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இதுவரை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது: மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னையில் இதுவரை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
2. சென்னை முழுவதும் குருதி சார் அளவீடு ஆய்வு நடத்த மாநகராட்சி முடிவு
கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் சென்னை முழுவதும் குருதி சார் அளவீடு ஆய்வு நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
3. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
வண்டலூர் பூங்காவில் தற்போது 8 சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தினார்.
4. சென்னையில் கூடுதலாக 7 அரசு மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை - அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னையில் கூடுதலாக 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
5. ஜூன் 02: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 95.99 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 90.12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.