தேசிய செய்திகள்

இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவு! + "||" + India Reports Less than l Lakh Coronavirus Cases in Fourth day Continuously

இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவு!

இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவு!
இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்கள் குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.  

அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 91 ஆயிரத்து 702 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 92 லட்சத்து 74 ஆயிரத்து 823 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 11 லட்சத்து 21 ஆயிரத்து 671 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 580 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 90 ஆயிரத்து 73 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 3 ஆயிரத்து 403 பேர் உயிரழ்ந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 63 ஆயிரத்து 79 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 24 கோடியே 60 லட்சத்து 85 ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 6,148 ஆக பதிவானது ஏன்? - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
இந்தியாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 6,148 ஆக பதிவாகியுள்ளது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
2. இந்தியாவில் புதிய உச்சமாக ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 6,148 ஆக பதிவு
பீகார் மாநிலத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை மறுகணக்கீட்டின் மூலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3. குஜராத்: காய்கறி சந்தையில் காற்றில் பறந்த சமூக இடைவெளி - கொரோனா 3-வது அலை அச்சம்
குஜராத்தில் காய்கறி சந்தை பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் சமூக இடைவெளியின்றி நடமாடிய நிகழ்வு வைரஸ் பரவலை மேலும் அதிகரிக்ககூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
4. ஊழியர்கள் சுமார் 400 பேர் கொரோனாவுக்கு பலி - தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த மத்திய அரசுக்கு கோல் இந்தியா கோரிக்கை
பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களில் சுமார் 400 பேர் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.
5. இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவு!
இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.