சினிமா செய்திகள்

மத்திய அரசை “பாரத பேரரசு” என்று அழைப்போம் - நடிகை குஷ்பு டுவீட் + "||" + We will call the Central Government the "Baratha perarasu" - Actress Khushbu Tweed

மத்திய அரசை “பாரத பேரரசு” என்று அழைப்போம் - நடிகை குஷ்பு டுவீட்

மத்திய அரசை “பாரத பேரரசு” என்று அழைப்போம் - நடிகை குஷ்பு டுவீட்
மத்திய அரசை “பாரத பேரரசு” என்றே அழைப்போம் என நடிகை குஷ்பு டுவீட் செய்திருப்பது தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை
 
மத்திய அரசை ஒன்றிய அரசு என தமிழக அரசியல் தலைவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.க. பிரமுகரும் நடிகையுமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசை, ஒன்றிய அரசு என அழைத்தால், நாம் பாரத பேரரசு என்று அழைப்போம், என பதிவிட்டுள்ளார். 

மேலும் தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி  வாழ்க பாரத தேசம் வாழ்க தமிழகம் என கூறி உள்ளார். இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. ‘திட்டலாம், அணைத்து கொள்ளலாம்’ ‘‘என்னை விமர்சிக்க கமல்ஹாசனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது’’ குஷ்பு பேட்டி
‘‘என்னை திட்டவும், அணைத்து கொள்ளவும், விமர்சிக்கவும் கமல்ஹாசனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது’’, என குஷ்பு தெரிவித்துள்ளார்.