தேசிய செய்திகள்

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் + "||" + Terrorists opened fire at a joint naka party of police and CRPF in Kashmir

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.
ஸ்ரீநகர், 

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம் அக்லர் பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இன்று மதியம் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது, அங்குவந்த பயங்கரவாதிகள் சிலர் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரை குறிவைத்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்தியவுடன் அங்கிருந்து பயங்ரவாதிகள் தப்பிச்சென்றுவிட்டனர். 

இந்த தாக்குதலை தொடர்ந்து அக்லர் பகுதியை சுற்றுவளைத்த பாதுகாப்பு படையினர் தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியர் கைது
இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
2. ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
3. காஷ்மீர்: பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் கண்டுபிடிப்பு - ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
4. கடனை திருப்பி செலுத்த முடியாததால் தலைமறைவாகி பிரச்சினைக்குள் தனது மனைவியின் அக்காவை சிக்கவைக்க முயற்சித்த நபர்
தனது மகளின் திருமணத்திற்காக 1.5 லட்ச ரூபாய் கடன் வாங்கிய நபர் கடனை திரும்பி செலுத்த முடியாததால் தனது மனைவியின் அக்காவை இந்த பிரச்சினைக்குள் சிக்கவைக்க முயற்சித்துள்ளார்.
5. காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பாஜக கவுன்சிலர் உயிரிழப்பு
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பாஜக கட்சியை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் உயிரிழந்தார்.