தேசிய செய்திகள்

கடந்த 121 ஆண்டுகளில் இந்தியாவில் மே மாதம் அதிகபட்ச மழை பதிவு + "||" + May records second highest rainfall in 121 years, IMD says

கடந்த 121 ஆண்டுகளில் இந்தியாவில் மே மாதம் அதிகபட்ச மழை பதிவு

கடந்த 121 ஆண்டுகளில் இந்தியாவில் மே மாதம் அதிகபட்ச மழை பதிவு
கடந்த 121 ஆண்டுகளில் இந்தியாவில் மே மாதம் அதிகபட்சமாக 107.9 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
புதுடெல்லி

மே 2021 மாதத்தில் நாடு முழுவதும் மழைப்பொழிவு 107.9 மில்லிமீட்டர் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது 62 மிமீ அதன் நீண்ட கால சராசரியை (எல்பிஏ) விட 74 சதவீதம் அதிகமாகும்."மே மாதத்தில் இந்தியாவில் இந்த் மழைப்பொழிவு 1901 ஆம் ஆண்டிலிருந்து இரண்டாவது அதிகபட்சமாகும். 1990 ஆம் ஆண்டில் (110.7 மிமீ) மிக அதிக மழை பெய்தது" என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  தனது மே மாதத்திற்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் இரண்டு சூறாவளி உருவானது. தக்தே புயல் அரேபிய கடலில் உருவானது மற்றும் 'மிகவும் கடுமையான சூறாவளி புயலாக' மாறி . இது மேற்கு கடற்கரை மாநிலங்களை கடந்து  பின்னர் மே 17 அன்று குஜராத் கடற்கரையைத் தாக்கியது.

அதுபோல் 'யாஷ்' சூறாவளி வங்காள விரிகுடாவில் உருவாகி 'மிகக் கடுமையான சூறாவளி புயலாக' தீவிரமடைந்தது.  மே 26 அன்று ஒடிசா கடற்கரையைத் தாக்கியது மற்றும் மேற்கு வங்காளத்தையும் பாதித்தது.

இந்த இரண்டு புயல்களாலும்  மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்ல, நாட்டின் பிற பகுதிகளிலும் மழை நன்கு பெய்தன. உதாரணமாக, 'தக்தே' சூறாவளி பலவீனமடைந்ததால், அது வட இந்தியாவை நோக்கிச் சென்று வட இந்தியாவின் பல பகுதிகளில் மழை பெய்தது.இதேபோல், ‘யாஷ்’  புயலால் கிழக்கு இந்தியா, ஜார்கண்ட், பீகார் உட்பட பல மாநிலங்களில்  மழை பெய்தது.

தொடர்புடைய செய்திகள்

1. வரும் திங்கள் கிழமை தென்மேற்கு பருவ மழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
மே 31 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. தக்தே புயல்; அதி தீவிர புயலாக மாற வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் புயலாக மாறி 175 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிமை மையம் எச்சரித்துள்ளது.