உலக செய்திகள்

கோவேக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு + "||" + FDA rejects emergency use authorization for Bharat Biotech’s Covaxin jab

கோவேக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு

கோவேக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு
கொரோனா அவசரகால தேவைக்காக கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி மறுத்துள்ளது.
வாஷிங்டன்,

கொரோனா அவசரகால தேவைக்காக கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி மறுத்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. கோவேக்சின் தடுப்பூசி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் அவசரகால தேவைக்கு அனுமதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றது.

இதனிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் அமெரிக்க ஒப்பந்ததாரரான ஒகுஜென் நிறுவனம் சார்பில் கோவேக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் அவசரகால தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரியிருந்தது. இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த ஒகுஜென் நிறுவனம் அளித்த கோரிக்கையை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நிராகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கோவேக்சின் தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் சீரம் உள்ளதா? - மத்திய அரசு விளக்கம்
கன்றுக்குட்டியின் உடலில் இருந்து எடுக்கப்படும் சீரத்தை வைத்து, வேரோ செல்கள் என்ற உயிருள்ள செல்கள் உருவாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
2. கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலையை உயர்த்த தடுப்பூசி நிறுவனங்கள் கோரிக்கை
கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலையை உயர்த்த தடுப்பூசி நிறுவனங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 500 மையங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு: மும்பை மாநகராட்சி
21-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 500 மையங்களில் தடுப்பூசி போட மும்பை மாநகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது.
4. இன்று வரை வயது வாரியாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் விவரம்
நாட்டில் 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 40 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
5. அமெரிக்கர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: ஜோ பைடன்
அமெரிக்கர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.