தேசிய செய்திகள்

ஏ.டி.எம். பண பரிவர்த்தனை கட்டண உயர்வு : 5 இலவச பணப் பரிவர்த்தனைகளில் மாற்றமில்லை + "||" + RBI Allows Banks To Raise Charges For ATM Withdrawals

ஏ.டி.எம். பண பரிவர்த்தனை கட்டண உயர்வு : 5 இலவச பணப் பரிவர்த்தனைகளில் மாற்றமில்லை

ஏ.டி.எம். பண பரிவர்த்தனை கட்டண உயர்வு : 5 இலவச பணப் பரிவர்த்தனைகளில் மாற்றமில்லை
ஏ.டி.எம். பண பரிவர்த்தனை கட்டணங்களை ரிசர்வ் வங்கி சிறிய அளவு உயர்த்தியுள்ளது.
புதுடெல்லி,

ஏ.டி.எம். பண பரிவர்த்தனை கட்டணங்களை ரிசர்வ் வங்கி சிறிய அளவு உயர்த்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:- 
வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏ.டி.எம்களில் இருந்து மாதத்திற்கு ஐந்து முறை கட்டணமில்லாமல் பணம் எடுக்கவும், இதர வங்கிகளின் ஏ.டி.எம்களில் இருந்து மூன்று முறை கட்டணமில்லமால பணம் எடுக்கவும் அனுமதி தொடர்கிறது. 

ஊரகப் பகுதிகளில், இதர வங்கிகளின் ஏ.டி.எம்களில் இருந்து மாதத்திற்கு ஐந்து முறை கட்டணமில்லாமல் பணம் எடுக்க அனுமதி தொடர்கிறது. இந்த ஐந்து மற்றும் மூன்று இலவச பரிவர்த்தனைகளுக்கும் மேலே பணம் எடுத்தால், அவற்றிற்கு இதுவரை அதிகபட்சமாக விதிக்கப்பட்ட 20 ரூபாய் கட்டணம், அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்று முதல் 21 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. இந்த 21 ருபாய் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டு, இத்துடன் சேர்க்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

21 ரூபாய் கட்டணம் என்பது அதிகபட்ச வரம்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிகள் இந்த ரம்பிற்கும் கீழே, தங்கள் விருப்பபடி கட்டணங்களை விதிக்க அனுமதிக்கபடுகிறது. உதாரணமாக எஸ்.பி.ஐ வங்கி தற்போது ஜி.எஸ்.டி வரி தவிர்த்து பரிவர்த்தனை ஒன்றுக்கு 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. ஒரு வங்கியின் வாடிக்கையாளர், வேறு ஒரு வங்கியின் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால், அதற்கு வாடிக்கையாளரின் வங்கி, மற்றொரு வங்கிக்கு அளிக்க வேண்டிய கட்டணத்தை 15 ரூபாயில் இருந்து ஆகஸ்ட் ஒன்று முதல் 17 ரூபாயாக ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது.

 பணப் பரிமாற்றம் அல்லாத இதர பரிமாற்றங்களுக்கு, வங்கிகளிடையே வசூலிக்கப்படும் கட்டணம் 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக, ஆகஸ்ட் ஒன்று முதல் அதிகரிக்கப்பட உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் கடைசியாக 2014 ஆகஸ்டிலும், வங்கிகளுக்கிடையே விதிக்கப்படும் கட்டணங்கள் 2012 ஆகஸ்டிலும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பல லட்சம் பணத்துடன் திருப்பூரில் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற முகமூடி கொள்ளையர்கள்
திருப்பூரில் அதிகாலையில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பல லட்சம் பணத்துடன்ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. சத்தியமங்கலத்தில் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ஓய்வு பெற்ற ஆசிரியர் வங்கி கணக்கில் நூதன முறையில் பணம் அபேஸ் மர்ம நபருக்கு வலைவீச்சு
சத்தியமங்கலத்தில் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ஓய்வு பெற்ற ஆசிரியர் வங்கி கணக்கில் நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. ஏ.டி.எம்.மில் நிரப்ப எடுத்து சென்ற ரூ.60 லட்சத்துடன் டிரைவர் தலைமறைவு: போலீஸ் தேடும் பணி தீவிரம்
பெங்களூருவில் ஏ.டி.எம். மையத்தில் நிரப்ப எடுத்து சென்ற ரூ.60 லட்சம் இருந்த வாகனத்துடன் டிரைவர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.