தேசிய செய்திகள்

பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திரிணாமூல் காங்கிரசில் இணைந்தார் முகுல் ராய் + "||" + Mukul Roy Returns To Trinamool, Mamata Banerjee Says Not A 'Gaddar'

பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திரிணாமூல் காங்கிரசில் இணைந்தார் முகுல் ராய்

பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திரிணாமூல் காங்கிரசில் இணைந்தார் முகுல் ராய்
பாஜகவில் இருந்து விலகிய முகுல் ராய் மீண்டும் திரிணாமூல் காங்கிரசில் இணைந்தார்
கொல்கத்தா,

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் இருந்தவர் முகுல் ராய். இவருக்கும் மம்தாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு முற்றியது. இதனால் கட்சி நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த முகுல்ராய், கடந்த 2017-ம் ஆண்டும் அக்டோபர் மாதம் கட்சியில் இருந்து விலகினார். அத்துடன் மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தவர், பாஜகவில் இணைந்தார்.

திரிணமூல் காங்கிரஸிலிருந்து வெளியேறி, பாஜகவில் இணைந்த முகுல்ராய்க்கு, பாஜகவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பேசப்படுகிறது. கட்சியின் மாநிலத் தலைவர் திலிப் கோஷ், தேசியச் செயலர் ராகுல் சின்ஹா ஆகியோரைத் தாண்டி முகுல் ராயால் செயல்பட முடியவில்லை என்று கூறப்பட்டது.

இதற்கிடையே மேற்கு வங்கத் தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார். இதையடுத்து, முகுல் ராய் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்துள்ளார். தனது மகன் சுப்ரன்ஷு ராயுடன் கட்சியில் இணைந்து கொண்டார்.  

தொடர்புடைய செய்திகள்

1. நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு
நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்து 7 ஆண்டுகள் நிறைவை கொண்டாட வேண்டாம் - தொண்டர்களுக்கு நட்டா வேண்டுகோள்
பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 7 ஆண்டுகளை நிறைவு செய்யும் தினத்தன்று நலத்திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தொண்டர்களுக்கு ஜேபி நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளது.
3. மே.வங்காளம்: திரிணாமூல் காங்.- 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை, தொண்டர்கள் கொண்டாட்டம்
மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
4. மேற்கு வங்காளம்; திரிணாமூல் காங். அதிக இடங்களில் முன்னிலை
மேற்கு வங்காளம் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திரிணாமூல் காங். அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
5. மேற்கு வங்காளம்: நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவு
மேற்கு வங்காளத்தில் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி முன்னிலை வகிக்கிறார்.