தேசிய செய்திகள்

பாலியல் பலாத்காரம் : 6ம் வகுப்பு மாணவி கர்ப்பமானதை தொடர்ந்து ஆசிரியர் கைது + "||" + Class 6 Student Found Pregnant After Teacher Repeatedly Rapes Her In School

பாலியல் பலாத்காரம் : 6ம் வகுப்பு மாணவி கர்ப்பமானதை தொடர்ந்து ஆசிரியர் கைது

பாலியல் பலாத்காரம் : 6ம் வகுப்பு மாணவி கர்ப்பமானதை தொடர்ந்து ஆசிரியர் கைது
ராஜஸ்தான் மாநிலமத்தில் 6ம் வகுப்பு மாணவி ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமானதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து உள்ளனர்.
ஜோத்பூர்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில்  உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு மாணவி  சுர்ஜாரம் என்ற ஆசிரியரால்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறுமி  கர்ப்பிணியாக உள்ளார்.  இதை தொடர்ந்து போலீசார் நேற்று  ஆசிரியரை கைது செய்தனர். இது தொடர்பாக  பள்ளியின் மற்றொரு ஆசிரியர்  சாஹி ராமையும்  போலீசார் கைது செய்தனர்.ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வ்ழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் மொகம்காரில் உள்ள பாபா கி நிம்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் சுர்ஜாராம், மார்ச் மாதம்  6 ஆம் வகுப்பு மாணவியை பள்ளியில் மூன்று முதல் நான்கு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்  மற்றொரு ஆசிரியர் சாஹி ராம் அறைக்கு வெளியே  காவல் இருந்து உள்ளார்.

சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தந்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.சோதனையின்போது, சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்து  அவரது தந்தை போலீசில் புகார் அளித்து உள்ளார்.சிறுமி   கர்ப்பமாக இருப்பதை போலீசார் மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இதை தொடர்ந்து கல்வித் துறை ஆசிரியர்கள் இருவரையும் இடைநீக்கம் செய்து, அவர்கள் இருவருக்கும் எதிராக துறை ரீதியான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

பாதிக்கபட்ட சிறுமிக்கு ஆதரவும், உதவியும் வழங்கப்படும் என ராஜஸ்தான் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் சங்கீதா பெனிவால் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமி பாலியல் பலாத்காரம் : நாகின் 3 தொடர் புகழ் நடிகர் கைது
இப்போது, மற்றொரு தொலைக்காட்சி நடிகரான 'நாகின் 3 புகழ் பேர்ல் வி பூரி கைது செய்யப்பட்டுள்ளார் .கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2. மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்; தொழிலாளி கைது
மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டனர்.
3. காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
காதலித்த பெண்ணை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை
ஐதராபாத்தில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
5. 11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் : தலைமை ஆசிரியருக்கு மரண தண்டனை, ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை
ஐந்தாம் வகுப்புப் படித்து வந்த பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக தலைமை ஆசிரியருக்கு மரண தண்டனையும், ஆசிரியருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.