மாநில செய்திகள்

மகாராஷ்டிராவின் புனேவில் இருந்து 3.65 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன + "||" + 3.65 lakh vaccines arrived in Chennai from Pune in Maharashtra

மகாராஷ்டிராவின் புனேவில் இருந்து 3.65 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன

மகாராஷ்டிராவின் புனேவில் இருந்து 3.65 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன
மகாராஷ்டிர மாநிலம் புனேவிலிருந்து மேலும் 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு இன்று வந்தடைந்தன.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன. இதனால் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

எனவே தமிழகத்தில் தடுப்பூசி சுத்தமாக கையிருப்பில் இல்லை என்பதால் உடனடியாக தடுப்பூசிகளை அனுப்புமாறு மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவசர செய்தி அனுப்பினார்.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேவிலிருந்து மேலும் 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு இன்று வந்தடைந்தன. சென்னை விமான நிலையத்தில் தடுப்பூசிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து அந்த தடுப்பூசிகள் குளிா்பதன வசதி கொண்ட வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு உரிய பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகின்றன. பின்னர் இந்த தடுப்பூசிகள் மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 23.10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- சுகாதாரத்துறை
நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 23 கோடியை கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2. “சுகாதாரத்துறைக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும்” - நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் நிபந்தனை
நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் மற்றும் நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
3. திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு
மேற்கு வங்கத்தின் கர்தாஹா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட காஜல் சின்ஹா கொரோனா தொற்று ஏற்பட்டு இன்று உயிரிழந்தார்.
4. தொடர்ந்து அதிகரிக்கும் வைரஸ் தொற்று; கர்நாடகத்தில் புதிதாக 783 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடகத்தில் புதிதாக 783 பேருக்கு கொரோனா பாாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. மராட்டியத்தில் புதிதாக 1,842 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் புதிதாக 1,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மராட்டிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.