சினிமா செய்திகள்

போலி டுவிட்டர் கணக்கு : நடிகர் சார்லி போலீசிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் + "||" + Fake Twitter account: Actor Charlie complained to the Police Commissioner's Office

போலி டுவிட்டர் கணக்கு : நடிகர் சார்லி போலீசிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

போலி டுவிட்டர் கணக்கு : நடிகர் சார்லி  போலீசிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு இருப்பது தொடர்பாக போலீசில் நடிகர் சார்லி புகார் அளித்துள்ளார்.
சென்னை

 நடிகர் சார்லியின் பெயரில் டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் "இந்த டுவிட்டர் உலகில் உங்கள் அனைவருடனும் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்ற பதிவு வெளியாகியிருந்தது. இதை வைத்து பலரும் சார்லியின் டுவிட்டர் கணக்கை பின்தொடர தொடங்கினார்கள்.

தற்போது இந்த டுவிட்டர் கணக்கு போலியானது என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  புகார் அளித்துள்ளார் சார்லி. இது தொடர்காக போலீஸ் கமிஷனர்  அலுவலகத்தில் சார்லி கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடகம், திரைப்படங்களில் நடிகராக பணியாற்றிவரும் நான் எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதைத் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய பெயரில் என்னுடைய அனுமதியின்றி இன்று (ஜூன் 11) போலி டுவிட்டர் கணக்கு (https://twitter.com/ActorCharle) துவங்கி இருக்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே தடை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மிகப் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்"இவ்வாறு சார்லி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சினிமா படபிடிப்புக்காக காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கொச்சின் சென்ற நயன்தாரா
'பாட்டு' சினிமா படபிடிப்புக்காக தனி விமானத்தில் காதலர் விக்னேஷ் சிவனுடன் கொச்சின் சென்றுள்ளார் நடிகை நயன்தாரா.
2. உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் 19 ஆம் தேதி அமெரிக்கா பயணம்
உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் வருகிற 19 ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கிறார்.
3. தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகர் சாலை விபத்தில் மரணம்!
தேசிய விருது வென்ற கன்னட நடிகர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவரது உடலுறுப்புகளைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.
4. தொழிலதிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக பிரபல நடிகை புகார்
வங்காள தேசத்தின் பிரபல நடிகை தொழிலதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக பிரதமர் பேஸ்புக் மூலம் புகார் கூறி உள்ளார்.
5. 2021ல் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலில் முதலிடத்தில் நடிகர் விஜயின் மாஸ்டர்
பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐஎம்டிபியின் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.