தேசிய செய்திகள்

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 238- பேருக்கு கொரோனா + "||" + Delhi reports 238 new #COVID19 cases, 504 recoveries and 24 deaths in the last 24 hours.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 238- பேருக்கு கொரோனா

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 238- பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா தொற்று 2-வது அலை பரவல் வேகம் கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து, டெல்லியில் ஊரடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.  டெல்லியில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. 

அதன் விவரம் வருமாறு: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 238- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 504 ஆக உள்ளது.   கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 24 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். 

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 30 ஆயிரத்து 671- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 01 ஆயிரத்து 977- ஆக உள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்து 772 ஆக இருக்கிறது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,922- ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் மேலும் 62,480- பேருக்கு கொரோனா
இந்தியாவில் 73 நாட்களுக்குப் பிறகு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் கீழ் வந்தது
2. பிரேசில்: கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,335 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
3. கேரளாவில் இன்று 12,469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் தற்போது 1,08,560 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. டெல்லியில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 158 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பிரேசிலில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா- ஒரே நாளில் 84- ஆயிரம் பேருக்கு தொற்று
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 84,735 - பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.