மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை + "||" + Central and state governments should come forward to reduce taxes on petrol and diesel: Anbumani Ramadas

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, 

பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தொட்டுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைக்க முன்வர வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தொட்டுள்ளது. கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.95க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.91.64 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வு மக்களைக் கடுமையாக பாதிக்கும்!

கலால் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32.90 ரூபாயும், டீசலுக்கு 31.80 ரூபாயும் மத்திய அரசு வசூலிப்பதுதான் விலை உயர்வுக்குக் காரணம். தமிழக அரசின் வரியையும் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.58.28, டீசலுக்கு ரூ.50.13 வரியாக வசூலிக்கப்படுகிறது. இது நியாயமல்ல!

தமிழ்நாட்டில் மாநில அரசின் மதிப்புக் கூட்டுவரியாக பெட்ரோலுக்கு ரூ.25.38 (34%), டீசலுக்கு ரூ.18.33 (25%) வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசு வரியில் மாநில அரசின் பங்கையும் சேர்த்து தமிழக அரசுக்கு முறையே ரூ.39.19, ரூ.31.68 வருமானமாகக் கிடைக்கிறது!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. மக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.10 வீதம் மொத்தம் ரூ.20 குறைக்க முன்வர வேண்டும்” என்று அதில் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
2. த.வா.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக தி.மு.க. நிா்வாகி உள்பட 5 போ் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
3. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வசூல் 88 % அதிகரிப்பு
பெட்ரோல் ஒரு லிட்டருக்கான கலால் வரி ரூ.19.98-ல் இருந்து ரூ.32.9 ஆகவும், டீசல் ஒரு லிட்டருக்கான கலால் வரி ரூ.15.83-ல் இருந்து ரூ.31.8 ஆகவும் உயர்த்தப்பட்டன.
4. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
5. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.