மாநில செய்திகள்

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இன்று தடுப்பூசி; பொதுமக்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தல் + "||" + Vaccination today only for physically challenged people in Coimbatore

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இன்று தடுப்பூசி; பொதுமக்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தல்

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இன்று தடுப்பூசி; பொதுமக்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தல்
கோவையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு மட்டும் இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கோவை,

கோவை மாவட்டத்தில் இன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் இன்றைய தினம் பொதுமக்கள் யாருக்கும் தடுப்பூசி போடப்படாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கோவை மாநகரில் 31 மையங்கள், புறநகரில் 46 மையங்கள் என மொத்தம் 77 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா தொற்றால் வயதானவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வண்ணம் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று பிரத்யேகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதையடுத்து கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.  

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு கட்டுப்பாடுகளில் விலக்கு அளிக்க பரிசீலனை: அஜித் பவார்
2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க அரசு பரிசீலித்து வருவதாக துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார்.
2. தமிழகத்துக்கு கூடுதலாக 70 ஆயிரம் கொரோனா தடுப்பூசி சென்னை வந்தடைந்தது
2-வது டோசுக்கு பயன்படுத்த சுகாதாரத்துறை திட்டம்: தமிழகத்துக்கு கூடுதலாக 70 ஆயிரம் கொரோனா தடுப்பூசி சென்னை வந்தடைந்தது.
3. மராட்டியத்தில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது
மராட்டியத்தில் இதுவரை 4 கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. தமிழகத்துக்கு கூடுதலாக 8½ லட்சம் கொரோனா தடுப்பூசி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது
தமிழகத்துக்கு கூடுதலாக மேலும் 8½ லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நேற்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன.
5. தமிழகத்தில் அடுத்தகட்டமாக ஆன்மிக தலங்கள் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி
தமிழகத்தில் அடுத்தகட்டமாக ஆன்மிக தலங்கள் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.