தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது + "||" + India’s daily Covid tally rises marginally to 62,224; new fatalities at 2,542 while active cases slump below 900,000

இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது

இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,224 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அந்த வகையில் 9வது நாளாக இன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது. 

நேற்று 60,471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டநிலையில், மேலும் 2,726 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,224 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62 ஆயிரத்து 224 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 96 லட்சத்து 33 ஆயிரத்து 105 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 2,542 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,79,573 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 07 ஆயிரத்து 628 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 83 லட்சத்து 88 ஆயிரத்து 100 ஆக உயர்வடைந்து உள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 8,65,432 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 26 கோடியே 19 லட்சத்து 72 ஆயிரத்து 014 ஆக உள்ளது (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,00,458 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது) என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தொடர்புடைய செய்திகள்

1. ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம்: 1 கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை, மருந்துகள், மருத்துவ சிகிச்சை
1 கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை, மருந்துகள், மருத்துவ சிகிச்சைகள் வழங்கும் வகையில் ‘மக்களை தேடி மருத்துவம்’ எனும் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
2. இந்தியாவில் 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் கடந்த 4 வாரங்களில் 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.
3. இந்தியா-ரஷ்யா 13 நாட்கள் கூட்டு ராணுவ பயிற்சி; ஆகஸ்ட் 1 முதல் தொடக்கம்
இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு ராணுவ பயிற்சி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது.
4. சீனாவில் படிப்படியாக உயரும் கொரோனா பாதிப்பு; புதிதாக 71 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
5. இந்தியாவில் முதன்முதலில் தேயிலையை பயிரிட்டவர்
மனிதனின் அடிப்படை தேவையான தண்ணீரை அடுத்து சர்வதேச அளவில் அனைவரும் பருகும் பானம் தேநீர்.காலை எழுந்தவுடன் தேநீர் அருந்தவில்லை என்றால் அன்றைய நாளில் எதையோ இழந்துவிட்டது போல் தோன்றும் அளவுக்கு நம் வாழ்க்கையோடு ஒன்றாக கலந்துவிட்டது.