மாநில செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு + "||" + Chennai High Court refuses to stay Plus 2 cancellation order

பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
பிளஸ் 2 தேர்வு ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

கொரோனாவின் தாக்கம் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஒடிசா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்து பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தனர். 

இதையடுத்து தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. பின்னர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருப்பதால் பொதுத்தேர்வு ரத்து செய்வதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. 

இதையடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது குறித்து முடிவு செய்ய குழு அமைக்கப்படும் என்றும் அந்தக் குழு வழங்கும் பரிந்துரைகள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, 10 பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிளஸ் 2 தேர்வு ரத்து செய்ததை எதிர்த்து ராம்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

இந்நிலையில், அரசின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும், பிளஸ் 2 தேர்வு ரத்து செய்ததை எதிர்க்கும் மனு மீது வரும் 23-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான பாலியல் வழக்கை டிசம்பர் 20-ந்தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறப்பு டி.ஜி.பி. மீதான வழக்கை வருகிற டிசம்பர் 20-ந்தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று விழுப்புரம் கோர்ட்டுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. பெரியபாளையம் கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரத்தில் அகற்ற வேண்டும்
பெரியபாளையம் கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரத்தில் அகற்ற வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.
3. இன்று முதல் ஒரு வாரம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் கலெக்டர்களுக்கு இறையன்பு உத்தரவு
மு.க.ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து உடனடி நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று கலெக்டர்களுக்கு, இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
4. சிறப்பு தேர்வு முடிவு வெளியிடும் வரை மாணவர் சேர்க்கைக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
சிறப்பு தேர்வு முடிவு வெளியிடும் வரை மாணவர் சேர்க்கைக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.
5. தமிழகத்தில் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு புதிய உத்தரவு
தமிழகத்தில் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு புதிய உத்தரவு.