உலக செய்திகள்

இங்கிலாந்தில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு + "||" + UK reports 9,055 new cases - the highest daily total since February - and another nine deaths

இங்கிலாந்தில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

இங்கிலாந்தில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது.
லண்டன், 

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்க் கொல்லியான கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. 

ஒரு சில நாடுகள் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வந்துள்ள நிலையில் பல நாடுகளில் கொரோனா வைரசின் புதிய, புதிய அலைகள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.  அந்த வகையில்,  இங்கிலாந்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. 

குறிப்பாக, இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் அங்கு வேகமாகப் பரவிவருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை கடந்த சில நாட்களாக இருந்து வந்தது. 

இந்த நிலையில், இன்றைய பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்துள்ளது. அந்நாட்டில் கடந்த பிப்ரவரி 25- ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு இதுதான் ஆகும். இங்கிலாந்தில்  9,055- பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 9 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணியில் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் சேர்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது.
2. பாகிஸ்தானுக்கு எதிரான டி20: இங். அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.
3. 2வது டி20 போட்டி: 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து
இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
4. இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் - இந்திய அணி பேட்டிங் தேர்வு
இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.
5. 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்த இங்கிலாந்து திட்டம்
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த இங்கிலாந்து திட்டம்