தேசிய செய்திகள்

வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்- மக்கள் அச்சம் + "||" + 3 Low-Intensity Earthquakes Hit Assam, Manipur, Meghalaya

வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்- மக்கள் அச்சம்

வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்- மக்கள் அச்சம்
வடகிழக்கு மாநிலங்களில் சில மணி நேர இடைவெளிக்குள் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது அங்குள்ள மக்களை அச்சம் அடையச்செய்துள்ளது.
புதுடெல்லி

வடகிழக்கு மாநிலங்களில் சில மணி நேர இடைவெளிக்குள் அடுத்தடுத்து 3 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது அங்குள்ள மக்களை அச்சம் அடையச்செய்துள்ளது. 

அசாம் மாநிலத்தின் சோனித்பூர் பகுதியில் இன்று அதிகாலை 2.04 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, சிறிது நேரத்தில் மேகாலயாவின் மேற்கு காஜி பகுதியில் இன்று அதிகாலை 4.20 மணிக்கு 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.  

தொடரந்து மணிப்பூரிலும்  3.0 என்ற அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகலாயா, மணிப்பூரில் அடுத்தடுத்து அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் அங்குள்ள மக்களை பீதியடைச் செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான பதிவுகள் ஆக்கிரமித்துள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. அசாம் - மிசோரம் எல்லை வன்முறை; அமித்ஷா மீது ராகுல் காந்தி தாக்கு
உள்துறை அமைச்சர் வெறுப்பையும், அவநம்பிக்கையையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்துவிட்டார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
2. ஐதராபாத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு
ஐதராபாத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.8 ஆக பதிவு
பிலிப்பைன்ஸ் நாட்டின் கலடாகன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.4 ஆக பதிவு
உத்தரகாண்டில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. மராட்டியம்; பால்கரில் லேசான நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவில் பதிவு
நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பால்கர் உள்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.