தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள்: எடியூரப்பா அறிவிப்பு + "||" + Karnataka announces further relaxation of lockdown restrictions: Shops, hotels allowed to operate till 5pm

கர்நாடகாவில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள்: எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகாவில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள்: எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி நாளை முதல் அரசு பஸ்கள், மெட்ரோ ரெயில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இதனால் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் தொடர்ந்து தளர்வுகள் செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் குறைந்து வரும் மாவட்டங்களில் மட்டும் இந்த தளர்வுகளை அரசு செய்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வருகிற 21-ந் தேதி அதிகாலை 5 மணி வரை 58 மணி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் குறைந்திருப்பதால் ஊரடங்கில் தளர்வுகள் செய்வது குறித்து நேற்று மந்திரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு பஸ்கள், மெட்ரோ ரெயில்கள் இயக்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்-மந்திரி எடியூரப்பா, “கர்நாடகத்தில் ஊரடங்கு காரணமாக பல மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதையடுத்து, ஊரடங்கில் எந்த மாதிரியான தளர்வுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து மந்திரிகளுடன் விரிவாக ஆலோசித்தேன். நிபுணர்கள் குழுவும் தளர்வுகள் செய்வது குறித்து சில பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி இருந்தது. அதன்படி, வருகிற 21-ந் தேதி (அதாவது நாளை) முதல், கொரோனா பரவல் 5 சதவீதத்திற்கு குறைவாக உள்ள 16 மாவட்டங்களில் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அதன்படி, பெங்களூரு, மண்டியா, பெலகாவி, உத்தரகன்னடா, துமகூரு, கோலார், கதக், ராமநகர், பாகல்கோட்டை, ஹாவேரி, ராய்ச்சூர், யாதகிரி, பீதர், சிக்பள்ளாப்பூர், கலபுரகி, கொப்பல் உள்பட 16 மாவட்டங்களில் அதிகாலை 5 மணியில் இருந்து மாலை 5 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதிகள் இல்லாமல் ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், தங்கும் விடுதிகள் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன், அங்கேயே அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படுகிறது. இது மாலை 5 மணிவரை மட்டுமே ஆகும். வெளிப்புற படப்பிடிப்புகள் 50 சதவீதம் பேருடன் நடைபெறலாம். மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் ஓடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பஸ்களில் 50 சதவீத பயணிகள் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அதுபோல், பெங்களூருவில் 50 சதவீத பயணிகளுடன் மெட்ரோ ரெயில் இயங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் பேர் பணியாற்றி கொள்ளலாம். உடற்பயிற்சி கூடங்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. அங்கு 50 சதவீதம் பேர் மட்டுமே பயிற்சி மேற்கொள்ளலாம். இந்த 16 மாவட்டங்களில் மேற்கண்ட தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கில் தளா்வுகள் செய்யப்பட்டாலும், மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும். அதன்படி, இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு மாநிலம் முழுவதும் ஜூலை 5-ந்தேதி அதிகாலை 5 மணிவரை அமலில் இருக்கும். அத்துடன் வார இறுதி நாட்களிலும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு தொடரும். அதன்படி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 7 மணியில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை மாநிலம் முழுவதும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு தொடரும்.

கொரோனா நம்மை விட்டு செல்லவில்லை. இதனை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். மக்கள் நிம்மதியாக வாழ ஊரடங்கில் தளர்வுகளை செய்து அறிவித்துள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகா: பட்டாசு குடோனில் வெடிவிபத்து - 2 பேர் பலி
கர்நாடகாவில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
2. கர்நாடகாவில் மேலும் 1,116- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கர்நாடகாவில் இன்று மேலும் 1,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 1,102 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
4. கேரளாவில் இரவு நேர ஊரடங்கு ரத்து- முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு
கேரளாவில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
5. கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
கர்நாடகாவில் இன்று புதிதாக 973 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.