மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு + "||" + Lockdown extended in Puducherry

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுவை,

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு  வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.புதுவையில்  தற்போதைய கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில்,  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

திரைப்படம் மற்றும் சின்னத்திரைக்கான படப்பிடிப்பை 100 பேரைக் கொண்டு நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.  மதுக்கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் காலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்படும்.  பூங்காக்கள் காலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கலாம். 

அனைத்து தனியார் அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.  பொதுப் போக்குவரத்துக்கு காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்கு மற்றும் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
தமிழகத்தில் நேற்று 1,647- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
2. டெல்லியில் மேலும் 30 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஆந்திராவில் மேலும் 1,179-பேருக்கு கொரோனா
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,179- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் மேலும் 1,661- பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 16,984- ஆக உயர்ந்துள்ளது.
5. தடுப்பூசி முகாமில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சைதாப்பேட்டையில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.