தேசிய செய்திகள்

இந்தியாவில் 40 பேர் டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் + "||" + 40 people affected by Delta Plus corona in India Ministry of Health

இந்தியாவில் 40 பேர் டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இந்தியாவில் 40 பேர் டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
இந்தியாவில் 40 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. அந்தவகையில் பல நாடுகளில் உருமாறிய வைரஸ் பரவல் காணப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் சமீபத்தில் புதிய வகை மாறுபாடு கண்டறியப்பட்டது. இதற்கு டெல்டா என பெயரிடப்பட்டு இருக்கிறது. இது வேறு பல நாடுகளில் பரவி வருவதும் கண்டறியப்பட்டது.

இந்தநிலையில் கொரோனாவின் மற்றொரு மாறுபாடான டெல்டா பிளஸ் தொற்று (ஏ.ஒய்.1) அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டு இருக்கிறது. இது இந்தியாவிலும் தனது வேலையை காட்டி வருகிறது. அந்தவகையில் மராட்டியம், கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் 40 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. 

தொடர்ந்து உருமாறி வரும் கொரோனாவின் புதிய வைரஸ்களை கவலைக்குரிய மாறுபாடு மற்றும் நலனுக்குரிய மாறுபாடு என இரு வகையாக உலக சுகாதார நிறுவனம் பிரித்து உள்ளது. இதில் டெல்டா பிளஸ் தொற்று கவலைக்குரிய மாறுபாடாக கண்டறியப்பட்டு உள்ளது. எனினும் பரவல் விவகாரத்தில் இந்த ைவரசில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 183-ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
2. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்; இந்தியா முதலில் பந்து வீச்சு
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது.
3. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் நேற்று 30 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தினசரி பாதிப்பு இன்று மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
4. இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 48 கோடியை கடந்தது
இந்தியாவில் இன்று மாலை 7 மணி நிலவரப்படி, இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 48 கோடியை கடந்துள்ளது.
5. இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை; மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.