தேசிய செய்திகள்

இந்தியாவின் தற்போதைய நிலையை நாடகமாடி திசை திருப்புகிறார் - பிரதமர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு + "||" + Rahul Gandhi blames PM for dramatizing current situation of India

இந்தியாவின் தற்போதைய நிலையை நாடகமாடி திசை திருப்புகிறார் - பிரதமர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவின் தற்போதைய நிலையை நாடகமாடி திசை திருப்புகிறார் - பிரதமர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பிரதமர் மோடி இந்தியாவின் தற்போதைய நிலையை நாடகமாடி திசை திருப்புவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,

‘டாய்கேத்தான்-2021 ’ என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண்காட்சியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலிக்காட்சி வழியாக கலந்துரையாடினார். அப்போது அவர், “இந்தியாவின் திறன்கள், கலை, கலாசாரம், சமூகத்தை உலகம் புரிந்து கொள்ள விரும்புகிறது. நாட்டின் திறன்கள், யோசனைகளின் உண்மையான பிம்பத்தை உலகுக்கு முன்வைக்கும் பொறுப்பை இளைய தலைமுறையினர், தொடக்க நிறுவனங்கள் மனதில் கொள்ள வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.

இதையொட்டி மோடியை சாடி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறையினர் வேலை இல்லாத நிலையை சந்தித்து வருகின்றனர். பிரதமர், இந்தியாவின் தற்போதைய நிலையை நாடகமாடி கவனத்தை திசை திருப்புகிறார். அவர் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்” என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,831- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 541-பேர் உயிரிழந்துள்ளனர்.
2. இந்தியாவில் இதுவரை 46.15 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது - மத்திய சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 53 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. இந்தியா, சீனா 12-வது சுற்று பேச்சு; இன்று நடக்கிறது
இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே கிழக்கு லடாக் எல்லையில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மோதல் போக்கு நிலவி வந்தது. அதைத் தொடர்ந்து இரு தரப்பும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த பிப்ரவரி மாதம் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இரு தரப்பு படைகள் திரும்பப்பெறப்பட்டன.
4. இந்தியாவுக்கான பயண தடையை நீட்டித்தது பிலிப்பைன்ஸ்
இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளுக்கான பயண தடையை ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி வரை நீட்டித்து பிலிப்பைன்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
5. இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 45.5 கோடியை கடந்தது
இந்தியாவில் இன்று மாலை 7 மணி நிலவரப்படி, இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 45.5 கோடியை கடந்துள்ளது.