உலக செய்திகள்

அமெரிக்காவில் 32 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் + "||" + Reports that 32 crore vaccine doses have been given to public in the US

அமெரிக்காவில் 32 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்

அமெரிக்காவில் 32 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 32 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 32,06,87,205 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியான தகவலின்படி மொத்தம் 31,98,72,053 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அமெரிக்காவில் இதுவரை 17,83,31,677 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 15,12,52,034 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் கொரோனாவால் மோசமாக பாதிப்பு
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுக்கிறது. புளோரிடா மாகாணம், மோசமான பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
2. அமெரிக்காவில் சர்வதேச மத சுதந்திரத்துக்கான தூதராக இந்தியர் நியமனம்
அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தில் இந்திய வம்சாவழியினர் பல்வேறு உயர் பதவிகளை வகித்து வருகின்றனர்.
3. அமெரிக்காவில் 34.4 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 34.4 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. அமெரிக்காவில் ‘எச்-1 பி’ விசாக்களுக்கு 2-வது முறையாக குலுக்கல்; இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் மகிழ்ச்சி
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர்.
5. அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தியவர்களும் கட்டாயம் முக கவசம் அணிய அறிவுறுத்தல்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.