உலக செய்திகள்

பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு பிலிப்பைன்ஸ் அரசு அவசர கால அனுமதி + "||" + Philippines gives emergency approval for Bharat Biotech vaccine

பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு பிலிப்பைன்ஸ் அரசு அவசர கால அனுமதி

பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு பிலிப்பைன்ஸ் அரசு அவசர கால அனுமதி
பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்காக பொதுமக்களுக்கு செலுத்த பிலிப்பைன்ஸ் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மனிலா,

இந்தியாவில் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு ‘பாரத் பயோடெக்’ என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பூசி மத்திய சுகாதாரத்துறையின் அங்கீகாரத்தைப் பெற்று தற்போது நாடு முழுவதும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்காக பொதுமக்களுக்கு செலுத்த பிலிப்பைன்ஸ் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவு மற்றும் மருந்து கழகத்தின் இயக்குனர் ரோலாண்டோ என்ரிக் கூறுகையில், ‘அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிலிப்பைன்சில் கோவேக்சின் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கோவேக்சின் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராக செயல் திறன் மிக்கது: ஆய்வில் தகவல்
டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. கோவேக்சின் தடுப்பூசி விவகாரத்தில் இன்னும் 4-6 வாரங்களில் முடிவு- உலக சுகாதார அமைப்பு
கோவேச்கின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து 4-6 வாரங்களில் முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
3. கோவேக்சின் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியீடு
கொரோனா அறிகுறிகள் ஏற்படாமல் தடுப்பதில் கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
4. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு சிறை பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட விரும்பாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
5. கோவேக்சின் தடுப்பூசியை தனியார் ஆஸ்பத்திரிக்கு அதிக விலைக்கு வழங்குவது ஏன்? பாரத் பயோடெக்
கோவேக்சின் தடுப்பூசியை தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அதிக விலைக்கு வழங்குவது ஏன் என்பது பற்றி அதன் உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.