மாநில செய்திகள்

சுஷில் ஹரி பள்ளியில் வைத்து சிவசங்கர் பாபாவிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை + "||" + CBCID Investigation on Sivashankar Baba in Sushil Hari school

சுஷில் ஹரி பள்ளியில் வைத்து சிவசங்கர் பாபாவிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

சுஷில் ஹரி பள்ளியில் வைத்து சிவசங்கர் பாபாவிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
சிவசங்கர் பாபாவை சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்துச் சென்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த 16-ந் தேதி கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அதன்பின்னர் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் சிவசங்கர் பாபாவை போலீசார் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி அம்பிகா, அவரை 15 நாட்கள் (ஜூலை 1-ந் தேதி வரை) காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து வந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக அவரை நேரடியாக கேளம்பாக்கம் பள்ளிக்கு அழைத்துச் சென்று நேரடியாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டர்.

அதன்படி உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்த பிறகு, இன்று கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளிக்கு சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேளம்பாக்கம் போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளியில் சிவசங்கர் பாபாவின் அறை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதனை திறந்து போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு சிவசங்கர் பாபாவிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் மாணவியின் தாயாருக்கு பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள்
முன்னாள் மாணவியின் தாயாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
2. தனக்கு ஆண்மை இல்லை என சிபிசிஐடி போலீசாரிடம் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம்
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, தான் ஆண்மையற்றவர் என்று சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமுலம் அளித்துள்ளார்.
3. சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துளது.
4. பாலியல் வழக்கு: சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு தள்ளுபடி
பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது .
5. பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் தலைமறைவு
பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.