தேசிய செய்திகள்

சுவிட்சர்லாந்து- ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசி இந்தியப் பயணிகளுக்கு அனுமதி + "||" + Switzerland, Iceland, 7 European Union nations clear Covishield: Report

சுவிட்சர்லாந்து- ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசி இந்தியப் பயணிகளுக்கு அனுமதி

சுவிட்சர்லாந்து- ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசி இந்தியப் பயணிகளுக்கு அனுமதி
சுவிட்சர்லாந்து- ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி

ஏழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலும் சுவிட்சர்லாந்திலும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அதன்படி, ஆஸ்திரியா, ஜெர்மனி, சுலோவேனியா, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட இந்தியர்களுக்கு பயணத்திற்கான ஒப்புதல் அளித்துள்ளன.

எஸ்டோனியா நாட்டிற்குச் செல்பவர்கள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.

இந்திய அரசினால் வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரித்து தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிடம் மத்திய அரசு கூறியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தடுப்பூசி போட்டவர்களை தனிமைப்படுத்தல் இன்றி உள்ளே அனுமதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் -டிஜிட்டல் கொரோனா சான்றிதழ் என்ற ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (இஎம்ஏ) அங்கீகரித்த கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு நபர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயணக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு பெறுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த தடுப்பூசிகளும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் சிறிய ரக விமானங்கள் விபத்து - 5 பேர் பலி
சுவிட்சர்லாந்து மலைத்தொடர் பகுதியில் இரண்டு சிறிய ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். இரு விமானங்களும் நேருக்கு நேர் மோதியதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.