மாநில செய்திகள்

கொரோனா குறைவதால் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வரலாம்..? தமிழக அரசு முடிவு + "||" + As the corona decreases Provide uniform relaxations for all district Tamil Nadu government decision ..!

கொரோனா குறைவதால் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வரலாம்..? தமிழக அரசு முடிவு

கொரோனா குறைவதால் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வரலாம்..? தமிழக அரசு முடிவு
கொரோனா குறைவதால் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் தர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் 5-ந்தேதிவரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதில், 3 வகையான மாவட்டங்களாக பிரித்து வெவ்வேறு வகையான தளர்வுகளை அறிவித்துள்ளார். 

முதல் வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களும், 2-ம் வகையில் அரியலூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட 23 மாவட்டங்களும், 3-ம் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் வருகின்றன.

இந்த நிலையில், 5-ந்தேதி ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில், அதை மேலும் நீட்டிப்பதற்கான ஆலோசனை கூட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பொது போக்குவரத்து இயங்கி வரும் நிலையில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா? மேலும் தளர்வுகளை அறிவிக்கலாமா? என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத்தெரிகிறது. அதைத் தொடர்ந்து நாளை அல்லது 4-ந்தேதியில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் பற்றிய அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.

 தமிழகத்தில் ஊரடங்கில் 3 வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றாக்கி தளர்வுகள் தர திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா குறைவதால் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் தர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிப்பு அதிகமிருந்த கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அரசு கூடுதல் தளர்வுகள் அறிவிக்க திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இளம் பெண் டாக்டருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு
மும்பையைச் சேர்ந்த இளம் பெண் டாக்டர் ஒருவருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: கேரளாவில் சனி -ஞாயிறு 2 நாட்கள் முழு ஊரடங்கு
கேரள அரசு கொரோனா வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது; சனி -ஞாயிறு 2 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. ஜூலை 27: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்படும் - மத்திய சுகாதாரத்துறை மந்திரி
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதம் முதல் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
5. ஜூலை 26: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.