மாநில செய்திகள்

தியாகராஜ பாகவதர் பேரனுக்கு வீடு மற்றும் ரூ.5 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் + "||" + Home and Rs. 5 lakh financial assistance to grandson of Thiyagaraja Bhagavathar - First Minister MK Stalin

தியாகராஜ பாகவதர் பேரனுக்கு வீடு மற்றும் ரூ.5 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தியாகராஜ பாகவதர் பேரனுக்கு வீடு மற்றும் ரூ.5 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தியாகராஜ பாகவதர் பேரனுக்கு வீடு மற்றும் ரூ.5 லட்சம் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பழம்பெரும் நடிகரும், கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்த எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் சாய் ராம் மற்றும் அவரது குடும்பத்தினர், தற்போது மிகவும் வறிய நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு அரசு சார்பில், குறைந்த வாடகையில் சென்னையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு வீடு ஒன்றினையும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கவும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவைச் செயல்படுத்தும் விதமாக, இன்று தலைமைச் செயலகத்தில், எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் வரவழைத்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில், அவரது குடும்பத்தினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பிற்கான ஆணையினையும், ரூ.5 லட்சம் நிதி உதவியினையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.