தேசிய செய்திகள்

கொரோனா காலத்தில் அற்பமான அரசியல் வேண்டாம் - ராகுல்காந்திக்கு பியூஷ் கோயல் அறிவுரை + "||" + July has come, vaccines haven’t, says Rahul Gandhi; faces backlash from Union ministers

கொரோனா காலத்தில் அற்பமான அரசியல் வேண்டாம் - ராகுல்காந்திக்கு பியூஷ் கோயல் அறிவுரை

கொரோனா காலத்தில் அற்பமான அரசியல் வேண்டாம் -  ராகுல்காந்திக்கு பியூஷ் கோயல் அறிவுரை
கொரோனா காலத்தில் அற்பமான அரசியல் வேண்டாம் என ராகுல் காந்தியை மத்திய மந்திரி பியூஷ் கோயல் குற்றம்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதுவரை இந்தியாவில் தற்போது 34 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. எனினும் சில மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருந்து வருவதாக அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன.

தடுப்பூசி பற்றாக்குறை குறித்து  ராகுல் காந்தி மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் இன்று அவர் தனது டுவிட்டர் பதிவில்,

ஜூலை மாதம் வந்துவிட்டது, கொரோனா தடுப்பூசி இன்னும் வரவில்லை, தடுப்பூசி எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள  மத்திய ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல்,

'தனியார் மருத்துவமனைகளுக்கு தனியாக விநியோகம் செய்யப்படுவது தவிர்த்து ஜூலை மாதம் 12 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும். தடுப்பூசி குறித்து 15 நாட்களுக்கு முன்னரே மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக நாடு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் அதன் தீவிரத்தை உணராமல் இந்த தருணத்தில் தேவையற்ற அற்பமான அரசியல் சரியானது அல்ல என ராகுல் காந்தி புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.