மாநில செய்திகள்

மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி - சென்னை ஐகோர்ட் + "||" + Manikandan was taken into custody for 2 days and interrogated Permission to the police

மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி - சென்னை ஐகோர்ட்

மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி - சென்னை ஐகோர்ட்
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது.
சென்னை,

சென்னை பெசன்ட்நகரைச் சோந்த நடிகை கொடுத்த புகாரின்பேரில் அதிமுக முன்னாள் அமைச்சா் மணிகண்டனை அடையாறு அனைத்து மகளிர் போலீசார் பெங்களூரில் கைது செய்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனா். இந்நிலையில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் மணிகண்டனுக்கு சோபா, ஏசி, செல்லிடப்பேசி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

இத் தகவலின் அடிப்படையில் சிறைத்துறையின் லஞ்ச ஒழிப்புப்பிரிவினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை சைதாப்பேட்டை சிறையில் திடீா் சோதனை செய்தனர். இந்த சோதனையில், அங்கிருந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இச் சம்பவத்துக்கு பின்னா், மணிகண்டன் புழல் -2 சிறைக்கு உடனடியாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், சிறையில் மணிகண்டன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக வெளியான தகவலை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்தனர். கொரோனா காலத்தில் கடைப்பிடிக்கப்படும் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றியே மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது.

மேலும் மணிகண்டனை ஜூலை 3, 4 ஆகிய தேதிகளில் மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

மணிகண்டனின் செல்போனை கண்டுபிடிக்கவும் அடையாறு போலீசுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது. முன்னாள் அமைச்சர் மணிகண்டனை வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக அரசு அமைத்த நீட் ஆய்வு குழுவுக்கு எதிரான பாஜகவின் மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட்
நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்தது செல்லும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
2. முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவு
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது
3. ''விலங்குகளுக்கு உணவு கிடைக்க திட்டம் தேவை'' - சென்னை ஐகோர்ட்
தெருவிலங்குகளின் பாதுகாப்பு, நாய்களுக்கான கருத்தடை நடைமுறையை மனிதாபிமான அடிப்படையில் செய்வதற்கு திட்டம் வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
4. சென்னை ஐகோர்ட்: ஜூன் 14-ம் தேதி முதல் 50% பணியாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும்: தலைமைப் பதிவாளர் உத்தரவு
சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளையில் ஜூன் 14-ம் தேதி முதல் 50% பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும் என்று தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
5. முதல்-அமைச்சர் முக ஸ்டாலினை அதிகாரிகள் தொந்தரவு செய்யக்கூடாது என வழக்குத்தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
முதல்-அமைச்சர் முக ஸ்டாலினை அதிகாரிகள் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிடக்கோரி வழக்குத்தொடர்ந்தவருக்கு சென்னை ஐகோர்ட் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.