மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை விஷம் போல ஏறிக்கொண்டிருக்கிறது - டிடிவி தினகரன் டுவீட் + "||" + Petrol, diesel and cooking gas prices are rising like poison - TTV Dhinakaran tweet

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை விஷம் போல ஏறிக்கொண்டிருக்கிறது - டிடிவி தினகரன் டுவீட்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை விஷம் போல ஏறிக்கொண்டிருக்கிறது - டிடிவி தினகரன் டுவீட்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை விஷம் போல ஏறிக்கொண்டிருக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழிகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வரும் நிலையில், நேற்று சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையும் 25 ரூபாய் அதிகரித்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எரிபொருட்களின் விலை உயர்வுக்கு பல அரசியல் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விலை உயர்வுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக்  கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனசாட்சியற்ற செயல்.

பெட்ரோல் - டீசலுக்கு  வாட்  வரி குறைப்பு, எரிவாயு சிலிண்டருக்கு மானியம் என்றெல்லாம் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற  மாநிலத்தில் உள்ள தி.மு.க அரசும் முன்வராதது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே,கொரோனா பேரிடரனால் கடுமையான பாதிப்புக்கு  உள்ளாகியிருக்கும் மக்கள் இதனால் மேலும் துன்பப்படுவது இவர்களது கண்களுக்கு தெரியவில்லையா? என்று டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. த.வா.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக தி.மு.க. நிா்வாகி உள்பட 5 போ் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
2. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வசூல் 88 % அதிகரிப்பு
பெட்ரோல் ஒரு லிட்டருக்கான கலால் வரி ரூ.19.98-ல் இருந்து ரூ.32.9 ஆகவும், டீசல் ஒரு லிட்டருக்கான கலால் வரி ரூ.15.83-ல் இருந்து ரூ.31.8 ஆகவும் உயர்த்தப்பட்டன.
3. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
5. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.