தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு - சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் + "||" + Corona vaccine shortage in Kerala - Health Minister Veena George

கேரளாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு - சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

கேரளாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு - சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
கேரளாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.
திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 12,868 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29,37,033 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1,02,058 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில்,

"பிற மாநிலங்களைபோல் கேரளாவிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் ஒருநாளைக்கு 2.7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிற நிலையில் தற்போது 7 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது.

மத்திய அரசு கேரளாவுக்கு வழங்கவேண்டிய கொரோனா தடுப்பூசி வந்து சேருவதில் தாமதம் நீடிக்கிறது. மேலும் கொரோனா நோய் தொற்றால் கேரளாவில் இறப்பவர்களின் எண்ணிக்கை 0.4 சதவீதமாக உள்ளது. என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் புதிதாக 11,586 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 135 பேர் பலி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,586 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு
கேரளாவில் ஜிகா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 48- ஆக உயர்ந்துள்ளது.
3. கேரளாவில் புதிதாக 17,466 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,466 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்தும், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு சமீபத்தில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரதம் இருந்தார்.
5. 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கேரளா, மராட்டியம் செல்ல கொரோனா சான்றிதழ் தேவை இல்லை
2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அதற்கான சான்றிதழுடன் வந்தால் கேரளா, மராட்டியத்துக்கு விமானத்தில் செல்ல கொரோனா சான்றிதழ் தேவை இல்லை என சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.