தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை 56 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி - மத்திய அரசு + "||" + There are 56 Delta AY.1 (Delta A Plus) cases in 12 states: Dr VK Paul, Member-Health, Niti Aayog to ANI

இந்தியாவில் இதுவரை 56 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி - மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை 56 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி - மத்திய அரசு
நாடு முழுவதும் இதுவரை 56 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வரும் நிலையில், டெல்டா பிளஸ் மரபணு கொரோனா வகையின் பரவல் வெகுவாக அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறையின் நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,

நாடு முழுவதும் 12 மாநிலங்களை சேர்ந்த 56 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஒருமுறை மட்டும் செலுத்தக்கூடிய ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

அந்த தடுப்பூசிகள் வெளிநாடுகளில் தயாரிக்கப்படுகிறது. ஆனால், ஐதராபாத் பயோ இ நிறுவனத்தில் இந்த தடுப்பூசியை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.