தேசிய செய்திகள்

இந்தியாவில் வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 9.19 சதவீதமாக குறைவு + "||" + India 9.19 per cent decrease in the unemployment rate in June

இந்தியாவில் வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 9.19 சதவீதமாக குறைவு

இந்தியாவில் வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 9.19 சதவீதமாக குறைவு
இந்தியாவில் வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 9.19 சதவீதமாக குறைந்துள்ளதாக பொருளாதார கண்காணிப்பு மையமான சி.எம்.ஐ.இ தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிக தாக்கத்தால் வேலையின்மை விகிதம், ஜூன் மாதத்தில் குறைந்துள்ளது. கடந்த மே மாதத்தில், 11.9 சதவீதமாக இருந்தது இந்த நிலையில் ஜூன் மாதத்தில், 9.19 சதவீதமாக குறைந்துள்ளதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (சி.எம்.ஐ.இ) புள்ளிவிவரம் கூறுகிறது.

நாட்டில் பொருளாதார செயல்பாடுகள் மீட்சி காண்பதை அடுத்து, வேலையின்மை விகிதம் குறைந்து வருவதாகவும் விரைவில், இதற்கு முந்தைய நிலையான, 6-7 சதவீதத்திற்கு திரும்பும் என எதிர்பார்க்கலாம் என்றும் சி.எம்.ஐ.இ. தெரிவித்துள்ளது. இருப்பினும், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மற்றும் வேலைவாய்ப்பு விகிதம், கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் வேலையின்மை விகிதத்தில் குறைவாகவும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மற்றும் வேலைவாய்ப்பு விகிதம் ஆகியவற்றில் மிக அதிகமாகவும் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் முதன்முதலில் தேயிலையை பயிரிட்டவர்
மனிதனின் அடிப்படை தேவையான தண்ணீரை அடுத்து சர்வதேச அளவில் அனைவரும் பருகும் பானம் தேநீர்.காலை எழுந்தவுடன் தேநீர் அருந்தவில்லை என்றால் அன்றைய நாளில் எதையோ இழந்துவிட்டது போல் தோன்றும் அளவுக்கு நம் வாழ்க்கையோடு ஒன்றாக கலந்துவிட்டது.
2. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணியில் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் சேர்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது.
3. இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இலங்கை அணிக்கு 227 ரன்கள் வெற்றி இலக்கு
இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு 227 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 41,383 பேருக்கு தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை - அமெரிக்க தூதரகம் வெளியிட்டது
விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு அந்நாட்டின் தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.