தேசிய செய்திகள்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பட்டியலில் மொத்த, சில்லரை வர்த்தகம் சேர்ப்பு + "||" + MSME Minister Gadkari: Retailers and traders to be included under the MSME sector

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பட்டியலில் மொத்த, சில்லரை வர்த்தகம் சேர்ப்பு

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பட்டியலில் மொத்த, சில்லரை வர்த்தகம் சேர்ப்பு
சிறு, குறு, நடுத்தர தொழில்துறையை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி, 

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பட்டியலில் மொத்த, சில்லரை வர்த்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை மந்திரி நிதின் கட்காரி  தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வரம்புக்குள் சேர்க்கப்படாமல் மொத்த, சில்லரை வர்த்தகங்கள் விடுபட்டு இருந்தன. இந்தநிலையில், திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மொத்த, சில்லரை வர்த்தகங்களையும் இந்த பட்டியலில் சேர்க்க சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.

இதனால், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப மொத்த, சில்லரை வர்த்தகங்களுக்கு முன்னுரிமை துறைக்கான பலன்கள் கிடைக்கும். அந்த வர்த்தகர்கள் 2½ கோடிபேர் பலனடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சிறு, குறு நடுத்தர தொழில்துறையின் கீழ் சில்லரை, மொத்த விற்பனை வணிகள் பதிவு செய்து கொள்ளலாம். திருத்தப்பட்ட விதிகளின்படி Udaym Registration portal -ல் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதிக்க மடீட்சியா கோரிக்கை
சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதித்திட வேண்டும் என்று மடீட்சியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2. குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு சலுகைகள் !
“கொரோனா போன்ற பெருந்தொற்றால் ஏற்பட்ட இடர்பாடு நேரத்தில், எங்களது முதல் முன்னுரிமை மக்கள் கையில் பணப்புழக்கம் இருப்பதுதான்.
3. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதம் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்க 91 லட்சம் கடன் உத்தரவாத ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.