மாநில செய்திகள்

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்காக ரூ.666.43 கோடி செலவிடப்பட்டு உள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி தகவல் + "||" + Rs 666.43 crore has been spent for the Assembly elections in Tamil Nadu - Chief Electoral Officer

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்காக ரூ.666.43 கோடி செலவிடப்பட்டு உள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்காக ரூ.666.43 கோடி செலவிடப்பட்டு உள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்காக ரூ.666.43 கோடி தொகை செலவிடப்பட்டு உள்ளது. என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்
சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தல் செலவுகளுக்காக கடந்த ஏப்ரல் மாதம் ரூ.617.75 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து கூடுதல் நிதி கேட்டு கடிதம் எழுதப்பட்டது. அதன்படி, அனைத்து கலெக்டர்களும் மொத்தம் ரூ.126.18 கோடி தொகை கேட்டிருந்தனர்.

இந்தத் தொகையை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று அரசுக்கு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து, தேர்தல் தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள பாக்கித் தொகைகளை செலுத்துவதற்காக ரூ.48.68 கோடி தொகையை அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் சட்டசபை தேர்தலுக்காக ரூ.666.43 கோடி தொகை செலவிடப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சதவிகிதம் குறைவாகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சதவிகிதம் குறைவாகவே உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
2. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் 66.2 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி - பொது சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் நடத்தப்பட்ட 3-வது குருதி சார் ஆய்வில், 66.2 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் காற்றாலைகள் மின்சார உற்பத்தியில் உச்சத்தில் உள்ளது - எரிசக்தி துறை அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் காற்றாலைகள் மின்சார உற்பத்தியில் உச்சத்தில் உள்ளது என்று எரிசக்தி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
5. தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 1,767 பேருக்கு தொற்று!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.