தேசிய செய்திகள்

அனைத்து வகை பருப்புகளின் இருப்புக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்து உத்தரவு + "||" + Order imposing restrictions on the availability of all types of pulses by the Central Government

அனைத்து வகை பருப்புகளின் இருப்புக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்து உத்தரவு

அனைத்து வகை பருப்புகளின் இருப்புக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்து உத்தரவு
நாட்டில் அனைத்து வகையான பருப்புகளை இருப்பு வைப்பதற்கான உச்ச அளவுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது.  இதேபோன்று, நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

இதன் எதிரொலியாக உணவு தானியங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்நிலையில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

இதனால், பருப்பு விலை மேலும் உயர்வதை கட்டுப்படுத்தவும், பதுக்கலை தடுக்கவும் வரும் அக்டோபர் மாதம் வரை பாசிப்பருப்பு தவிர மற்ற அனைத்து வகை பருப்புகளையும் இருப்பு வைக்க மத்திய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

இதன்படி, மொத்த விற்பனையாளர்கள் 200 டன் பருப்புக்கு மேல் இருப்பு வைக்க கூடாது.  சில்லரை வியாபாரிகள் 5 டன்னுக்கு மேல் இருப்பு வைக்க கூடாது. ஆலை உரிமையாளர்கள் கடந்த 3 மாத உற்பத்தி அல்லது ஆண்டு உற்பத்தியில் 25 சதவீதத்திற்கு மேல் இருப்பு வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.