உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி + "||" + Former President of Pakistan admitted to hospital

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கராச்சி,

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி (வயது 65).  சமீப நாட்களாக இவருக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.  இதனையடுத்து அவர், கராச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு முதலே உடல்நல குறைவால் அவதிப்பட்ட சர்தாரி, தன் மீதான வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு சென்று வருவதற்கு கடும் சிரமப்பட்டார்.  ஊழல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சர்தாரி சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு திடீரென மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.  இதனால் தனியார் மருத்துவமனையில் சேர்ந்த அவருக்கு மருத்துவர்கள் ரத்த பரிசோதனைகள் எடுத்து, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொத்துகள் ஏலம் விடப்படுமா? ஊழல் தடுப்பு கோர்ட்டில் மனு தாக்கல்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துகளை ஏலம்விட வேண்டும் என்று கோரி ஊழல் தடுப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கு: இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கினை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.